கோவில் வரலாறு


Temple History

அமரர்

திரு. கந்தையாப்பிள்ளை இராமலிங்கம்.


அமரர் 

திரு கந்தையாப்பிள்ளை வேதநாயகம்


முருகனின் அருள் ஆசியுடன்  இக் கோவில் அமரர் கதிரமலை போடி தம்பியப்பா என்பவரால் அவர்களின் கனவில் தோன்றிய  முருகனின் உத்தரவின் படி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு,

இந்தியாவில் இருந்து சிலைகள் எடுக்கப்பட்டு இக் கோவில் கட்டபட்டது.

பின்பு அவரின் மகனாகிய அமரர் தம்பியப்பா கந்தையாபிள்ளையினால் சிறப்புற  பராமரிக்கப்பட்டு நிந்தவூர் தமிழ் பேசும் மக்களால் பூசைகள்  செய்யபட்டுவந்தன.

அவரின் மறைவிற்கு பின் அவர்களின் வழித்தோன்றலும்

 மூத்த மகனும் ஆகிய அமரர் கந்தையாபிள்ளை நடராஜா பொறுப்பேற்று மிகவும்

சிறப்பாகோவில் நிர்வகிக்கப்பட்டு வந்தது.  அவரின் மறைவிற்கு பின் 


அவரின் சகோதர சகோதரிகள் கிய


அமரர் கந்தையாபிள்ளை இராமலிங்கம், அமரர் வள்ளியம்மை,

அமரர் கந்தையாபிள்ளை சோமசுந்தரம், அமரர் ஞானம்மா,  

அமரர் கந்தையாபிள்ளை வேதநாயகம், குணநாயகி, அமரர் கந்தையாபிள்ளை சபாரத்தினம் ஆகியோராலும், கிராம மக்களின் ஒத்துழைப்புடனும் சிறப்புற பராமரிக்கப்பட்டு பூசைகள் நடத்தப்பட்டன. 

தொடர் கலவரங்களாலும், இன குரோத வன் செயல்களாலும் இக் கோவில் அழிக்கப்பட்டது. முன்பு புதுப்பிக்கப்பட்ட கோவில் மீண்டும் மீண்டும் இடிக்கப்பட்டு எரிக்கப்பட்டது.

மீண்டும் அமரர் கந்தையாபிள்ளை வேதநாயகம் அவர்களின் தொடர் முயற்சியுடன் இக் கோவில் சுத்தம் செய்யப்பட்டு சிறிய கோவில் கட்டப்ப்பட்டு பூசைகள் நடத்தப்பட்டன. அவரின் மறைவிற்கு  பின் கோவில் பாழடையும் நிலையில் சென்றது. மீண்டும் இக் கோவில் 

அமரர் திரு கந்தையாப்பிள்ளை இராமலிங்கம்.

 அவர்களின் புத்திரர்களாலும், மற்றவர்களின் உதவியுடனும் புதுப்பிக்கப்படுகின்றது. இந்த ஆன்மீக முயற்சியில் உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.

Email: nintavurmurugan@gmail.com