Murugan widely regarded as Tamil's God and the ancient tamil people live in Nintavur village built this temple to pray, worship and conduct poojas to Murugan and continuously worshiping for more than 300 years.
Unfortunately this temple has been completely destroyed by continuous communal riots against tamil people live in these area.
Now the time has come to re built this historic temple. Recently a group of well-wishers from overseas as well as locals joint together and started construction of New temple on this site.
Any one would like to contribute in this construction process, Please feel free
to contact us through this email. nintavurmurugan@gmail.com.
Credit card payments also will be accepted. Click the above "Please Donate" button and follow the instruction.
தொடர் கலவரங்களாலும், இன குரோத வன் செயல்களாலும் இக் கோவில் அழிக்கப்பட்ட இக் கோவில் மீண்டும் புதுப் பொலிவுடன் கட்டபடுகின்றது. இத் திருப்பணியிற்கு உதவ விரும்பும் அடியவர்கள்
மேல் உள்ள " Please Donate" Button ஐ பொத்தானை அழுத்தி வழிமுறைகளைப் பின்பற்றவும்.
இந்த மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
nintavurmurugan@gmail.com
ஆலய முன்னாள் பொறுப்பாளர் திரு.கந்தையாப்பிள்ளை இராமலிங்கம்.
திருச்சிற்றம்பலம்
சிவமயம்.
அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய.
அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன்.
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடையே தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.
காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி.
ஏறு மயிலேறி விளையாடு முக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசு முக மொன்றே
கூறுமடி யார்கள் வினை தீர்க்கு முக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்த முக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்த முக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.